கருணாநிதி இல்லாத ஒரு இரவையே ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்த ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

கருணாநிதி இல்லாத ஒரு இரவை ஏற்றுக் கொள்ள முடியாமல், ஸ்டாலின் இரவு முழுவதும் குடும்பத்தினருடன் புலம்பியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் திகதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை மெரினாவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின் கட்சித் தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதியின் இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் மகனும், திமுகவின் செயல் தலைவருமான ஸ்டாலின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள் காலையிலே சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார், இதைப்பார்த்த ஆ. ராசா மற்றும் மா.சுப்பிரமணியம் போன்றோர் அவரை கட்டி அணைத்து தேற்றினர்.

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட அன்றைய இரவு முழுவதும் ஸ்டாலின் தந்தையைப் பற்றிய பல விஷயங்களை குடும்பத்தினருடன் கண்ணீருடன் பகிர்ந்ததாகவும், அவர் கருணாநிதி இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்ததாகவும் ஸ்டாலினிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...