இறந்து போனதே தெரியாது: தனது குட்டியை சுமந்து கொண்டு அலைந்த குரங்கு.. கல் மனதையும் கரைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்த குரங்கு குட்டியை அதன் தாய் குரங்கு சுமந்து கொண்டு அங்குமிங்கும் ஓடிய நிகழ்வு மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

ஊட்டியில் உள்ள குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் குரங்கு ஒன்று இங்கும் அங்கும் ஓடி கொண்டே இருந்தது. அதன் கையில் மற்றொரு குட்டிக்குரங்கு. அந்த குரங்கினை மார்போடு அணைத்துக் கொண்டு வேகவேகமாக ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்தது.

சுற்றுலா பயணிகள் இதனை உற்று கவனித்தபோதுதான் தெரிந்தது குட்டி குரங்கு, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்தது என்று.

தன் குட்டி இறந்தது கூட தெரியாமல் அந்த தாய் குரங்கு அதனை தூக்கி வைத்து மார்போடு அணைத்து கொண்டே இருந்தது

பின்னர் அங்குள்ள ஒரு புதருக்குள் குட்டியின் உடலை மறைத்து வைத்தது. மீண்டும் சாலைக்கு வந்து இங்கும் அங்குமாய் ஓடியது.

தாய் குரங்கின் இந்த செயல் அவ்வழியே சென்ற மக்களின் கண்களை குளமாக்கியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்