பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கவிடலாம்? நீதிபதி அதிரடி

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக டீன் ஏஜ் வயது சிறுவர், சிறுமிகள் மீதான கொடூரங்கள் அனுதினமும் நடந்தேறி வருகின்றன.

இந்நிலையில் சென்னை அருகே 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக வெளிநாட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் தலைமையில் நடந்தது.

அவர் கூறுகையில், சிறார்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என 2015ம் ஆண்டே கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதுபற்றி மத்திய அரசு பரிசீலிக்கவே இல்லை, பாலியல் குற்றங்களுக்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாகவே உள்ளனர்.

ஏழு மாதங்களாக தன் பிள்ளை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் என்பதை கூட அறியாமல் தாய் என்ன செய்து கொண்டிருந்தார்?

மத்திய அரசு குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு துறையை உருவாக்கினால் என்ன? எனவும் கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணையை 17ம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...