ஒருதலைக் காதல் விபரீதம்! சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் குத்திக் கொலை

Report Print Raju Raju in இந்தியா
161Shares
161Shares
ibctamil.com

இந்தியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை, இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இளைஞரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் தானேவை சேர்ந்தவர் பிரச்சி (20). கல்லூரி மாணவியான இவர் ஆகாஷ் பவர் (23) என்ற இளைஞரை மூன்றாண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் பிரிந்தார்.

ஆனால் பிரச்சியை விடாமல் துரத்திய ஆகாஷ் தன்னை காதலிக்கும்படி வலியுறுத்தி வந்தார்.

ஆனால் இதற்கு பிரச்சி ஒத்து கொள்ளாததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துவந்தார் ஆகாஷ்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சாலையில் ஸ்கூட்டரில் பிரச்சி சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி பிரச்சியை கொலை செய்துள்ளார்.

பின்னர் தப்பியோடிய ஆகாஷை பொலிசார் கைது செய்தனர்.

நேற்று ஆகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை வரும் 22-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்