அண்டாவில் மூழ்கடித்து பெற்ற பிள்ளை கொடூர கொலை? அதிர்ச்சி சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் கடலூரில் ஏழு மாத குழந்தை அண்டாவில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரின் கட்டமுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி ஜெயசித்ரா.

இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மிதுன்(வயது 3), லட்சன்( 7 மாதம்) என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

புதுச்சேரியில் வேலை பார்த்து வரும் மிதுன், நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

மிதுனும் பள்ளிக்கு சென்ற பின்னர், லட்சனுடன் ஜெயசித்ரா வீட்டில் இருந்துள்ளார்.

மதிய வேளையில் சிலம்பரசனின் தந்தை வீட்டுக்கு வந்த போது இருவரையும் காணவில்லை.

வீடு முழுவதும் தேடி பார்த்துள்ளார், குளியலறைக்கு சென்ற போது ஒரு அண்டா மூடி வைக்கப்பட்டிருந்தது.

சந்தேகத்தில் அதை திறந்து பார்த்த போது உள்ளே லட்சன் பிணமாக இருந்துள்ளான்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தவர் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார், குழந்தையின் சடலத்தை பார்த்து அவர்கள் கதறி அழுதுள்ளனர்.

இதற்கிடையே விரைந்து வந்த புதுப்பேட்டை பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற பிள்ளையை கொன்றுவிட்டு ஜெயசித்ரா மாயமாகி விட்டாரா? அல்லது இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர், ஜெயசித்ராவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers