6-ல் ஆரம்பித்து 6-ல் முடிந்த கருணாநிதியின் வாழ்க்கை: வியக்க வைக்கும் சம்பவங்கள்

Report Print Raju Raju in இந்தியா
94Shares
94Shares
ibctamil.com

ஆறு என்ற எண் கருணாநிதியின் வாழ்க்கையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரியவந்துள்ளது.

இந்தியா முழுக்க செல்வாக்குடன் இருந்த காங்கிரஸ் இயக்கத்தைச் சுதந்திரம் பெற்ற இருபதே ஆண்டுகளில் தமிழகத்தில் சாய்த்த இயக்கம், தி.மு.க.

1969-ல் அண்ணா மறைந்த பின்னர் தி.மு.க இயக்கம் கருணாநிதியின் கையில் முழுவதுமாக வந்தது.

அண்ணா இறந்த அடுத்த ஆறு ஆண்டுகளில் நெருக்கடி நிலை. மாநிலக் கட்சிகள் செல்வாக்குடன் இருப்பதை அன்றைய பிரதமர் இந்திரா பிரிவினைவாதமாகப் பார்த்தார்

நெருக்கடிநிலை தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய அளவிலேயே மிசா-வைத் துணிச்சலாக எதிர்த்த ஒரே தலைவர் கருணாநிதி.

1962-ல் எதிர்க்கட்சி துணை தலைவரான கருணாநிதி, 1967-ல் தமிழ்நாட்டின் அமைச்சரானார். பின்னர் 1969-ல் திமுக தலைவரானதோடு, தமிழக முதல்வரானார்.

ஆகஸ்ட் 7-ம் திகதி மாலை 6.10க்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது. இப்படி 6 என்ற எண் கருணாநிதி வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இறுதிவரை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்