14 கைதிகளின் விடுதலைக்கு உதவிய சிறுவனின் நெகிழ்ச்சி செயல்

Report Print Vijay Amburore in இந்தியா
77Shares
77Shares
ibctamil.com

போபாலில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 14 கைதிகளை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக பணம் கொடுத்து உதவியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

போபாலை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் Ayush Kishore, கல்விக்காக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். இதன் காரணமாக கிசோருக்கு பல்வேறு உதவித்தொகைகள் வந்தவண்ணம் உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பிய சில கைதிகள், சிறைக்காவலரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

அடுத்த சில தினங்களில் அவருடைய மகளுக்கு திருமணமும் நடைபெறவிருந்தது. இதனை அறிந்த கிசோர் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்துள்ளார். தனக்கு கிடைத்த பரிசுத்தொகை ரூ.10000-ஐ அந்த பெண்ணிற்கு கொடுத்து உதவியுள்ளார்.

மகனின் உதவும் குணத்தை நினைத்து பெருமையடைந்த தாய், சிறையில் கைதிகள் படும் வேதனை குறித்து விவரித்துள்ளார். இதனை அறிந்த கிசோர், தண்டனை காலம் முடிந்து அபராதத்தொகை செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு உதவ வேண்டும் என முடிவெடுத்தார்.

அதன்படி, ரூ.27,850 அபராதத்தொகை செலுத்தி இந்தூர் சிறையிலிருந்து 12 கைதிகளும், போபால் சிறையிலிருந்து இருவரும் வெளியில் வர உதவியுள்ளார். கொலை குற்றவாளிகளான இவர்கள் 14 பேரும் வரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இதுகுறித்து கிசோர் கூறுகையில், கடந்த ஜனவரி மதம் 4 சிறை கைதிகள் வெளியில் வர உதவி செய்தேன். குடும்பத்தினரை சந்தித்ததும், அவர்கள் அனைவரும் அளவற்ற மகிச்சியில் இருப்பதை பார்த்து மிகுந்த உற்சாகமடைந்தேன். அப்போதுதான் நிறைய கைதிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்