கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அஜித்திடம் புகைப்படம் எடுத்த இளைஞர்! உண்மையில் நடந்தது என்ன?

Report Print Santhan in இந்தியா

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் அஜித்திடம் இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் உயிரிழந்ததையடுத்து அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, ராஜாஜி ஹாலில் அவரது உடல் வைக்கப்பட்டது.

அப்போது திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் அஜித்குமார் தன் மனைவி ஷாலியுடன் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார்.

இதையடுத்து இளைஞர் ஒருவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது.

இந்நிலையில் அந்த புகைப்படம் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, எடுத்த புகைப்படம் இல்லை எனவும், ஹைதராபாத்தில் எடுத்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers