உயிர்த்தோழனுக்கு கருணாநிதியின் கடைசி முத்தம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

அரசியலில் நீண்ட நாள் நண்பனும் கிடையாது, நீண்ட நாள் எதிரியும் கிடையாது என்பதை முறியடித்து 76 வருடங்களாக நண்பர்களாக இருந்தவர்கள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்.

1942ல் போடப்பட்ட நட்பு விதை இப்போது விருட்சமாக வளர்ந்தது. கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவரான பேராசிரியர் அன்பழகன், கருணாநிதி திமுக தலைவரானதில் இருந்தே, அவருடன் இருக்கிறார். கருணாநிதியின் வீட்டு திருமணம் மற்றும் சுப காரியங்கள் அனைத்தும் பேராசிரியர் தலைமையில்தான் நடக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் கருணாநிதியைக்காண அன்பழகன் சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென அன்பழகனின் கையை பிடித்து அந்த இயலாமையிலும் தன்வசம் இழுத்த கருணாநிதி, தன் வாழ்வோடு எப்போதும் இணைந்திருந்த அந்த கைக்கு முத்தம் கொடுத்தார்.

இதைப்பார்த்த அங்கிருந்த மற்றவர்களும், அன்பழகனும் நெகிழ்ந்து போயினர். தனது நண்பனுக்காக பேச முடியாத நிலையில் கருணாநிதி தன் அன்பைக்காட்டிய அந்த தருணம்தான் இறுதித்தருணம். அதன் பின்னர் அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நேரத்தில் பார்த்தார்.

நேற்று கருணாநிதியின் இறுதிச்சடங்கில் சவப்பெட்டியில் உடல்வைக்கும் முன் ஆளுநர் முதல் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் குடும்பத்தார் மட்டும் ரோஜாப்பூக்களை தூவி கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த மரியாதை கருணாநிதியின் உற்ற நண்பர் அன்பழகனுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.

ரோஜாப்பூவை கையில் வாரி அவரது உயிரற்ற உடலின் காலடியில் போட்ட அன்பழகன் அழுத்தமாக தனது நண்பரை வெறித்து பார்த்தப்படி நின்றார்.

அவரை ஸ்டாலின் அழைத்தபோது, செல்வதற்கு முன்னும் மீண்டும் அதே பார்வையால் சில நொடிகள் பார்த்துவிட்டு திரும்பிச்சென்றார் அன்பழகன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers