கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்ட வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசியல் தளத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ள தமிழ் எழுத்தாளரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 7-ம் திகதி மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய கலைஞர் கருணாநியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்திய அரசியலில் முதுபெரும் தலைவரான கருணாநிதிக்கு நேற்று ராணுவ மரியாதையுடன் கூடிய இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

21 குண்டுகள் முழங்க அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் துவங்கி, திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், இசைஞானி இளையராஜா அவுஸ்திரேலியாவில் இருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், எல்லா துறைகளிலும் தலை சிறந்து விளங்கிய கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்