கருணாநிதி இறப்புக்கு பிறகு திமுகவில் அதிரடி மாற்றங்கள்: விரைவில் தலைவராகிறார் ஸ்டாலின்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுகவின் அடுத்த தலைவராக அவரது மகன் ஸ்டாலினை தெரிவு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

திமுக செயல் தலைவராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் திமுகவின் தலைவராகவிருக்கிறார். ஆகஸ்ட் 19 ஆம் திகதி திமுக பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் மூலம், கட்சி தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் துவங்கி உள்ளன. முறைப்படி ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான எல்லா விஷயங்களையும், முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகன் செய்யத் துவங்கி விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

பொதுச் செயலராக நீண்ட நாட்களாக இருந்து வரும் அன்பழகனையும், வயது முதிர்வு காரணமாக அப்பொறுப்பில் இருந்து விடுவித்துவிடலாம் என கூறப்படுகிறது.

அப்படி நடந்தால், பொதுச் செயலர் பொறுப்பில் மூத்த தலைவர் துரைமுருகனை அமர்த்தும் யோசனையிலும் ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers