39 சிறுமிகள் சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் பெண் அமைச்சர் ராஜினாமா

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் சிறுமிகள் தங்கும் விடுதியில் 39 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் இயக்கும் அரசு உதவி பெறும் காப்பகத்தில், பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, காப்பகத்தில் இருந்த 42 சிறுமிகளும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.

முதலில் அவர்களில் 29 சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் அனைவரும் மாதக் கணக்கில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்தது. மேலும், மற்ற சிறுமிகளின் மருத்துவ அறிக்கையும் வெளியானது.

39 சிறுமிகள் மாதக் கணக்கில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது தெரிய வந்தது. இந்த விடயம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சி.பி.ஐ விசாரணைக்கு அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில், குறித்த சிறுமிகள் விடுதிக்கு மாநில சமூக நலத்துறை அமைச்சர் குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

அத்துடன், குமாரி மஞ்சு வர்மா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குமாரி மஞ்சு வர்மா மாநில முதல்வர் நிதிஷ்குமாரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers