மாணவிகள் உடை மாற்றியதை மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியர்: அடுத்து நடந்த அதிரடியால் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்துத் துவைத்தனர்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஹசாயான் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டன.

தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடைகளை பள்ளியின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது பற்றி கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்துத் துவைத்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers