கடைசி வரை கருணாநிதியின் கையில் இருந்து கழற்றப்படாத அந்த முக்கிய பொருள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

1959-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியது.

திமுகவின் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் கருணாநிதி என்பதால், அதனை பாராட்டி தங்க மோதிரம் ஒன்றை அண்ணா அணிவித்தார்.

அண்ணா அணிவித்ததால் அந்த மோதிரத்தை ஒருபோதும் கழட்டியதே இல்லை கருணாநிதி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் கருணாநிதியின் அந்த மோதிரம் கழட்டப்படவில்லை.

கருணாநிதி உடலோடு ஒன்றாகிவிட்ட அந்த மோதிரம் அவர் உடல் அடக்கம் செய்யப்படும்போதும் கழட்டப்படவில்லை. அண்ணா அணிவித்தை மோதிரத்தை கழட்டாமலே கருணாநிதி உடலை அடக்கம் செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers