கருணாநிதிக்கு முதல் ஆளாக சென்று பால் ஊற்றிய கவிஞர் வைரமுத்து

Report Print Deepthi Deepthi in இந்தியா

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது, அவருக்கு போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி மகன் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை தனது மகனுடன் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பால் ஊற்றி கவிஞர் வைரமுத்து மரியாதை செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

மேலும் கருணாநிதி எழுதி வைத்த உயிலான சமூக நீதியை காப்பாற்றுவது தமிழ் சமுதாயத்தின் கடமை என்று தெரிவித்த வைரமுத்து, தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி செல்வதாகவும் சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதை போல உள்ளது கருணாநிதியின் மறைவு என்று கூறியுள்ளார்.

மேலும், அதிகாலை முதலே தொண்டர்கள் கருணாநிதியின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...