கருணாநிதி இறந்த துக்கத்திலும் பாராட்டு: ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கருணாநிதி, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திய காலங்களில், அவரது முழுமையான ஆலோசனை மற்றும் அறிவுரைப்படி ஸ்டாலின் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், கருணாநிதி மறைந்த பின் செயல் தலைவர் ஸ்டாலினின் முடிவுகள் எப்படி இருக்கும், அரசியல் மற்றும் சட்ட ரீதியான பிரச்னைகளை எப்படி கையாள போகிறார் என்ற எதிர்பார்ப்பு, திமுகவினர் மத்தியிலும், மற்ற கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது.

இதற்கு சவாலாக, அண்ணாதுரை நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய, அரசு அனுமதி மறுத்தது. ஆனால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி கண்டார்.

இதை, ஸ்டாலின் தலைமையிலான அரசியல் வெற்றியாக, திமுகவினர் தெரிவித்துள்ளனர். எனவே, எதிர்காலத்திலும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என துக்கத்திலும் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers