கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் இனி தமிழக மக்களுக்கு சொந்தம்: எப்படி தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி, தமது கோபாலபுரம் இல்லத்தை, ஏழைகளுக்கான மருத்துவமனை அமைக்க தானமாக அளித்துள்ளார்.

கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மையார் பெயரில் 'அன்னை அஞ்சுகம்' அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு, தமது 86வது பிறந்தநாளையொட்டி, கோபாலபுரம் இல்லத்தை, ஏழைகளுக்கு மருத்துவமனை அமைப்பதற்காக கருணாநிதி தானமாக வழங்கினார்.

தமது மனைவியின் ஆயுட்காலத்துக்குப் பிறகு, கோபாலபுர இல்லத்தை மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தில் கருணாநிதி கையெழுத்திட்டார்.

உருவாகவிருக்கும் அந்த மருத்துவமனைக்கு 'கலைஞர் கருணாநிதி மருத்துவமனை' என பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார்.

கடந்த 1968ம் ஆண்டு கோபாலபுரம் இல்லத்தை மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு பெயரில் கருணாநிதி பதிவு செய்தார்.

பின்னர் அவர்களது ஒப்புதலின் படி, கோபாலபுரம் இல்லம் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...