அனைவர் முன்னிலையிலும் ஸ்டாலின் உருக்கமான உரை

Report Print Deepthi Deepthi in இந்தியா
120Shares
120Shares
ibctamil.com

ராஜாஜி அரங்கில் வைத்து ஸ்டாலின் உருக்கமாக அனைவர் முன்னிலையிலும் பேசியுள்ளார்.

உயர்நீதிமன்றம் நமக்கெல்லாம் நல்ல தீர்ப்பை தந்திருக்கிறது. தலைவர் கலைஞரை பொறுத்தவரை, கடைசிவரை போராடியவர்.

அவர் நம்மை விட்டு பிரிந்துசென்ற பிறகு கூட, அவருக்குரிய இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளோம். சோகத்தில் இருக்கக் கூடிய நமக்கு கலைஞருடைய கனவு நனவாகிறது என்ற அந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்திலே ஆட்சியிலே இருக்கக் கூடியவர்கள் தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்க்கக் கூடாது என்று திட்டமிட்டார்கள்.

அதை நாம் உயர்நீதிமன்றம் சென்று தவிடுபொடியாக்கி இருக்கிறோம்.

கலைஞருடைய மறைவு நமக்கு சோகத்தை தந்திருந்தாலும் அவருடைய உணர்வை நாம் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம்.

எனவே, உங்கள் கால்களை தொட்டு மிகுந்த பணிவோடு கேட்கிறேன். இங்கே தலைவரின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

அவரால் உருவாக்கப்பட்டிருக்கிற நான், அவர் சார்பில் உங்களை அன்போடு கேட்கிறேன், எப்போது நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்ததோ, அப்போதே கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

காவல்துறை நமக்கு பாதுகாப்பு தருகிறதோ, இல்லையோ, அமைதியாக நீங்கள் கலைந்துசென்றால்தான், இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறும்.

மீண்டும் மீண்டும் கேட்கிறேன், கலைந்து செல்வீர்களா? கலைந்து செல்லுங்கள். தயவு செய்து கேட்கிறேன், கலைந்து செல்லுங்கள். யாரும் படியேறி மேலேறி வரவேண்டும் என்ற முயற்சி யில் ஈடுபடக் கூடாது என்று உங்களின் உடன்பிறவா ஒருவனாக, சகோதரனாகக் கேட்டுக்கொள்கிறேன்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்