அசரவைக்கும் கருணாநிதியின் சூப்பரான பன்ச்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை பச்சையப்பா கல்லுரியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் திமுக தலைவர் கருணாநிதி முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அது தேர்தல் நடக்கும் நேரம் என்பதால் மிகுந்த பரபரப்புக்கிடையே கருணாநிதி பேச அழைக்கப்பட்டிருந்தார்.

திமுக ஒரு அணியிலும், காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரணியிலும் இருந்தன. இலக்கிய விழா என்பதால் மேடையில் அரசியல் பேசக்கூடாது என்று கருணாநிதியிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முன்கூட்டியே கூறியுள்ளனர்.

மேடையில் தனது உரையைத் தொடங்கிய கருணாநிதி காதல் ரசம் சொட்ட, சொட்ட பேசினார். மாணவர்கள், பொது மக்கள் என அங்கிருந்த அனைவரும் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர்.

இலக்கிய உரையை நிகழ்த்தி பேச்சின் இறுதிக்கு வந்த கருணாநிதி, உரையை முடிக்கும் முன்பாக, தேர்தல் வரவிருக்கிறது என தொடங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒரு நொடி அதிர்ந்து போயினர்.

அரசியல் பேசக் கூடாது என சொல்லியிருந்தோமே… அப்படி இருந்தும் அரசியல் பேசத் தொடங்கி விட்டாரே என்று கவலைப்படத் தொடங்கினர்.

அப்போது கருணாநிதி இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது… என்றார்.. ஒரு நொடி தனது பேச்சை நிறுத்திய அவர்…. உணவருந்தி முடிந்ததும் அனைவரும் இலையை தூர போட்டு விட்டு கையை கழுவி விடுங்கள் என்றாரே பார்க்கலாம்’ அரங்கமே எழுந்து நின்று கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தது.

நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலையை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசின் கை சின்னத்தை கழுவி விடுங்கள் என்று நாசூக்காக சொல்லி முடித்தார். இப்படித்தான் தான் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்பவர் கருணாநிதி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers