காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நலம் குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் அஜித்.
சினிமா விருதுகள், பொது நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தவிர்க்கும் அஜித், கருணாநிதியை சந்திக்க வந்ததற்கு காரணமாக கூறப்படுவது அஜித்தின் மனிதாபிமானம் மற்றும் உடல்நலத்திற்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம்.
யாராவது உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் எனத் தெரிந்தால் அங்கே அவரது உதவி, முதல் உதவியாக இருக்கும். அவரது கண் மருத்துவர் விஜய் சங்கர் மூலம் 5 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் செய்து கொடுத்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் அஜித் எப்போதும் ஒரு முதலுதவி உபகரணத்தை தயார்நிலையில் வைத்திருப்பார். வேதாளம் படப்பிடிப்பில் அப்படிதான் ஒருவருக்கு விபத்து ஒன்று நடந்தது.
அப்போது அஜித் உடனடியாக போன் செய்து ஸ்பாட்டிற்கு மருத்துவர்களை வரவழைத்துவிட்டார். அந்தளவுக்கு உடல்நிலைக்கு ஏதாவது ஒன்று என்றால் முக்கியத்துவம் கொடுப்பதில் அஜித் மனிதாபிமானம் மிக்கவர்,
காலில் அறுவை சிகிச்சை, முதுக்கில் அறுவை சிகிச்சை, கைகளில் அறுவை சிகிச்சை என பல்வேறு அறுகை சிகிச்சைகளை செய்து கொண்டுள்ள அஜித், யாரை முதலில் பார்த்தாலும் கேட்கும் முதல் கேள்வி, அம்மா, அப்பா நல்லாயிருக்காங்களா? உடல்நிலை நல்லா இருக்கா? என்பதுதான்.