கோவிலுக்கு சென்ற நடிகர் சிவாஜிகணேசனை கட்சியில் இருந்து நீக்கிய கருணாநிதி: ஆன்மீக சர்ச்சை

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

கடவுள் இல்லை என்று கூறும் திராவிட இயக்கத்திலிருந்து தோன்றிய திமுக, ஒருகாலத்தில் கடவுள் நம்பிக்கை விடயத்தில் மிகக் கடுமையாக இருந்தது.

காங்கிரசில் சேருமுன் திமுகவில் இருந்த நடிகர் சிவாஜிகணேசன் திருப்பதி கோவிலுக்குச் சென்று வந்தார் என்பதற்காக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என கூறப்பட்டது.

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார்.

தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்.

கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார். மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இமானுஜர் எனும் தொடருக்கு கருணாநிதி வசனம் எழுதியபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என சொன்ன பெரியாரின் வழி வந்தவர் என பெருமையாக சொல்லிக்கொள்ளும் நாத்திகர் கருணாநிதி.

விசிஷ்டாத்வைதத்தை அருளி, கடவுளை அடையும் வழியை காட்டிய ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது முரண்பாடான கொள்கைக்கு சொந்தக்காரர் என விமர்சிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்