நண்பனே என் வயதை எடுத்துக்கோ: கருணாநிதியை உருக வைத்த சிவாஜி கணேசன்

Report Print Vijay Amburore in இந்தியா

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பவள விழா கொண்டாட்டத்தின் போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

தமிழக அரசியல் தளத்தில் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையினை வெற்றிகரமாக முடித்துள்ள, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும், அவருடைய கம்பீரமான குரலை திரும்ப கேட்க வேண்டும் என திமுக தொண்டர்கள் பலரும் மருத்துவமனை வளாகம் முன்பு குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு திரைப்பட கலைஞர்கள் சார்பாக கொண்டாடப்பட்ட கருணாநிதியின் பவளவிழா பற்றிய காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த காணொளியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நண்பா உன்னை நம்பி பல கோடி தொண்டர்கள் இங்கு இருக்கின்றனர். நீ என்னுடைய வயதில் 2 வயதை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு இன்னும் நிறைய நல்லது செய்ய வேண்டும் என நெகிழ்ச்சியுடன் பேசுவது அந்த காணொளியில் இடம்பிடித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்