50 அடி உயர நீர் வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த இளைஞர்.. நெஞ்சை பதற வைக்கும் காணொளி

Report Print Vijay Amburore in இந்தியா

சத்தீஸ்கர் மாநிலத்தில் நீர் வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் 50 அடி உயரத்தில் இருந்து தவறி விழும் காட்சி ஒன்று நெஞ்சை பதற வைக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் Gariaband மாவட்டத்தில் உள்ள நீர் வீழ்ச்சியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் வருகை தந்திருக்கிறார். அங்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த அந்த இளைஞர் தன்னுடைய நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு, நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த இளைஞருடைய கால், பாறையின் இடுக்கில் சிக்கி தவறியுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞர் மலையின் உச்சியிலிருந்து ஒவ்வொரு பாறையிலும் மோதி, நீர் விழும் அடிப்பகுதியில் வந்து விழுவதை போன்று அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தில் முதுகில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்ச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இதுகுறித்து விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், சம்மந்தப்பட்ட இளைஞர் Raipur மாவட்டத்தில் உள்ள Sarkhi கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்