மனைவியின் தவறான உறவை கண்டுப்பிடித்த கணவன்: மனைவி எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் மனைவிக்கு வேறு நபருடன் தகாத உறவு இருப்பதை கணவர் கண்டுப்பிடித்த நிலையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த அசோக்குமார் அங்குள்ள பனியன் ஆலையில் வேலை செய்து வந்தார்.

இவரின் மனைவி கவிதா. தம்பதிக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

கவிதாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் பாண்டியராஜன் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் கவிதாவை பார்க்க பாண்டியராஜன் நேற்று அவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அசோக்குமார் அங்கு வந்தபோது கவிதாவும், பாண்டியராஜனும் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து இருவரையும் பொலிசில் ஒப்படைக்க அசோக்குமார் நினைத்த நிலையில், கவிதா வீட்டு மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து பாண்டியராஜன் பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்