கருணாநிதியை நெகிழ வைத்த சச்சினின் கண்ணீர் உரை: இது உங்களுக்கு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவரான கலைஞர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று அவரது உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதால், மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர், கோவில்களில் கருணாநிதிக்காக சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்யப்பட்டன.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கருணாநிதி தொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தீவீர கிரிக்கெட் ரசிகரான இவர், சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது அவரைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், கிரிக்கெட்டில் மிகவும் அபாரமாக விளையாடி நினைவில் வைக்கத்தக்க சாதனைகளைப் படைத்து, இந்தியாவில் யாரும் செய்ய முடியாத வகையில் பெருமை சேர்த்த பிறகுதான் நீங்கள் ஓய்வு பெற்றுள்ளீர்கள்.

உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டீர்கள். இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருந்துள்ளீர்கள். .

புகழின் உச்சத்தை அடைந்த பிறகு தான் நீங்கள் பிரியா விடை பெற்றீர்கள். ரிடயர்மெண்டின் போது உங்களது கண்ணீர் உரை என்னை நெகிழ வைத்தது.

உங்களது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.

நீங்கள் நீண்ட காலம், உடல் ஆரோக்கியத்துடனும் எல்லையில்லா மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று கருணாநிதி அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்