குழந்தைகளை துடிதுடிக்க கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை: விசாரணையில் வெளியான உருக்கமான தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீளாத கணவன் குழந்தைகளை தூக்கி தொங்கவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த காவக்காரன் பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். வெங்காய வியாபாரியான இவருக்கு சசிகலா என்ற மனைவியும் வீரபத்ரன் (7) என்ற மகனும், விஜயா (4) என்ற மகளும் உள்ளனர்..

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார்.

இதனால் கணவரான ராஜகோபால் மனைவி இறந்த துக்கத்திலே இருந்து வந்துள்ளார். உறவினர்கள் வேறொரு திருமணம் செய்து கொள்ளும் படி என்று கூறிய போதும், திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனிமையில் இருந்து வந்த ராஜகோபால் தனது தோட்டத்தில் வேப்பம் மரத்தில் இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார் 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொலிசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராஜகோபால் தனது இரு குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார்.

இருப்பினும் தாய் இல்லாத குழந்தைகளை முறையாக கவனிக்க முடியாமல் இரண்டு குழந்தைகளையும் துடி துடிக்க கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்