தையல் வேலை செய்யும் ஏழை பெண்ணுக்கு கிடைத்த ரூ. 8½ லட்சம்: என்ன செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் தவறுதலாக ஏழை பெண்ணுக்கு ரூ. 8½ லட்சம் பணம் கிடைத்த நிலையில் அதை அவர் உரியவரிடம் ஒப்படைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியை சேர்ந்தவர் சிவசங்கரி (33). ஏழை பெண்ணான இவர் வீட்டிலேயே துணி தைத்து கொடுத்து வருகிறார்.

அவ்வப்போது டவுனில் உள்ள ஜவுளிக் கடைகளுக்கு சென்று துணிகளை வாங்கி வருவது வழக்கம் என்ற நிலையில் நேற்றும் துணி வாங்க சிவசங்கரி ஒரு கடைக்கு வந்தார்.

அப்போது அங்கு வந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடை உரிமையாளரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

வியாபார விடயமாக கடை உரிமையாளர் ரூ.8½ லட்சத்தை பேப்பரில் கட்டி லெனின் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தார். அவரும் மேஜையில் வைத்து விட்டு பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் துணி வாங்கிக்கொண்டு இருந்த சிவசங்கரி பில் போடுமாறு ஊழியரிடம் கூறினார்.

அவர்களும் பில் போட்டு ஜாக்கெட் பிட்டுகளை பேப்பரில் மடித்து சிவசங்கரி கொண்டு வந்திருந்த பையில் வைத்தனர். ஊழியரின் கவனக்குறைவு காரணமாக அருகில் இருந்த ரூ.8½ லட்ச பணக்கட்டையும் சிவசங்கரி பையில் வைத்தனர்.

இதை அறியாத சிவசங்கரியும் சிறிது நேரத்தில் கடையில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றார்.

இதனிடையே பணம் தொலைந்ததை அறிந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி கடை முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

வீட்டுக்கு போன சிவசங்கரி தனது பையை திறந்தபோது அதில் ரூ.8½ லட்சம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பணம் தவறுதலாக வந்திருக்கலாம் என முடிவு செய்த சிவசங்கரி அந்த கடைக்கு சென்று விவரத்தை கூறி பணத்தை ஒப்படைத்தார்.

பணம் கிடைத்ததை கண்டு லெனின் கிருஷ்ண மூர்த்தியும், கடை உரிமையாளரும் மகிழ்ச்சி அடைந்தனர். சிவசங்கரியின் நேர்மையை அவர்கள் பாராட்டினர்.

பணத்தை மட்டுமே பெரிதாக என்னும் இந்த காலத்தில் சிவசங்கரியின் நேர்மையான செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்