அப்படி சொல்ல மாட்டேன்: கருணாநிதி வைத்த செக்

Report Print Fathima Fathima in இந்தியா

தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா மீதும், அவர்களது கொள்கைள் மீதும் பற்றுக் கொண்ட கருணாநிதி, அவர்கள் வழியில் சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர்.

அதேபோல உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர், உடல் ஒத்துழைத்த வரையில் காலையில் எழுந்தவுடன் அண்ணா அறிவாலயம் சென்று நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

முதுகுவலிக்காக ஆபரேஷன் செய்த போது நடைப்பயிற்சியும் நின்றுவிட்டது, அதன்போது யோகா செய்ய அறிவுறுத்தப்பட்டார்.

பிரபல யோகா குருவான டிகேவி. தேசிகாச்சார், பயிற்சியின் போது ”நாராயண நமஹ” என கூறினாராம்.

அதற்கு கருணாநிதி “ஞாயிறு போற்றுதும்” என்று தான் கூறுவேன், இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான் என கூறினாராம்.

எனவே தேசிகாச்சாரும் இதற்கு ஒப்புதல் வழங்கினாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்