30 ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் வந்த சிவன் கோவிலை கட்டி வரும் நபர்: இன்று அந்த கோவில் எப்படி இருக்கு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கனவில் வந்த கோவிலை முதியவர் ஒருவர் 30 ஆண்டுகளாக கட்டி வரும் சம்பவம் பலரிடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கற்களால் கட்டப்பட்டு வரும் கும்ப சிவன் கோவில் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த கோவிலை 15 லட்சம் ரூபாய் செலவில், சத்யபூஷண் என்ற 64 வயது முதியவர் கட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் கற்களால் கட்டப்பட்டு வந்த இந்த கோவிலை பார்ப்பதற்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் அலை மோதுகின்றன.

இது குறித்து சத்யபூஷண் கூறுகையில், பள்ளி நாட்களில், மரம் மற்றும் மண்ணில், சிற்பங்களை வடிவமைக்க கற்றுக் கொண்டேன். அப்போது சிவன் கோவிலை கட்டுவது போல் எனக்கு கனவு வந்தது.

இதனால் அது போன்ற கோவிலை கட்ட முடிவு செய்தேன். 1980-ல், இந்த கோவிலை கட்டும் பணியை துவங்கினேன். இன்னும், கோவில் பணிகள் முழுமை அடையவில்லை.

இந்த கோவில் கட்டுவதற்கு அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும் பெறவில்லை எனவும், கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு உள்ளூர் மக்கள் உதவினர் என்றும், கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நன்கொடையாக பணம் கொடுப்பார் அதை வைத்து இந்த கோவிலை கட்டி வருவதாக கூறியுள்ளார்.

கோவில் முழுவதும் கற்களாலும், இரும்புக் கம்பிகளாலும் கட்டப்பட்டுள்ளது. எந்த வர்ணமும் பயன்படுத்தவில்லை. கோவிலுக்கு கீழ் ஒரு குகை உள்ளது.

இக்கோவிலில் மின்சார இணைப்பை இயக்கியதும், சிவன் தலை மீது உள்ள நீரூற்றில் இருந்து தண்ணீர் விழுவதுடன், மந்திரங்கள் ஒலிக்கும் வகையில், சத்யபூஷண் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers