பிரபல நடிகர் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது! மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி

Report Print Santhan in இந்தியா

பிரபல தொலைக்காட்சி நடிகரான சித்தார்த் சுக்லா பயங்கர விபத்தை ஏற்படுத்தியதால், அவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையின் Oshiwara பகுதியில் உள்ள டிவைடரில் பிரபல தொலைக்காட்சி நடிகரான சித்தார்த் சுக்லா தன்னுடைய BMW X5 SUV காரில் அசுர வேகத்தில் வந்து அங்கிருந்து மூன்று காரில் பயங்கரமாக மோதியுள்ளார்.

இந்த விபத்தின் காரணமாக மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சித்தார்த் சுக்லாவை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சித்தார்த் சுக்லா மீது அதிகவேகமாக காரை ஓட்டி வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் இன்று மாலை நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்