ஹாலிவுட் படங்களை பார்த்து கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கொடூர கணவன்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஹாலிவுட் படங்களை பார்த்து கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும் 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

தற்போது 4 மாத கார்ப்பிணியாக இருந்த அவர் சமீபத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ராமதாசுக்கும் புஷ்பாவுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மனைவியின் நடத்தையில் ராமதாசுக்கு எப்போதும் சந்தேகம் இருந்துள்ளது.

இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் புஷ்பா இரண்டாவது முறையாக கர்ப்பமானதால், ரமதாசுக்கு தன் மனைவி மீது தொடர்பு இருப்பது குறித்து சந்தேகம் அதிமாகியது.

இதனால் முன்னால் இவர்களுக்கிடையே நடந்த சண்டையை விட தற்போது சண்டை அதிகரிக்கவே துவங்கியுள்ளது.

இப்படி தொடர்ந்து சண்டை வந்ததால், பொறுமை இழந்த ராமதாஸ் ஒரு கட்டத்தில் மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அவர் யூடியூப்பில் தவறு செய்யும் பெண்களை கொலைசெய்யும் முறைகள் தொடர்பான வீடியோக்களையும், கொலை செய்து விட்டு எளிதில் தப்பிப்பது எப்படி ? என்பது தொடர்பான வீடியோக்களையும் கொலை செய்தால் இந்தியாவில் என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றது போன்ற வீடியோக்களையும் ஒரு மாதமாக பார்த்து வந்துள்ளார்.

குறிப்பாக ஹாலிவுட் படமான Scold's Bridle படத்தில் வரும் காட்சிகளை பார்த்துள்ளார். அதில் பெண்களின் வாயை இறுக்க பூட்டி கொடூரமாக கொலை செய்யும் முறைகளை பார்த்து அது போல ஒரு மாதமாக பயிற்சியும் எடுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 15-ஆம் திகதி புஷ்பா தன் தாயார் வீட்டிற்கு செல்வதற்காக அருகில் இருக்கும் கரும்பு தோட்டத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார்.

அவர் குளித்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்ற ராமதாஸ், புஷ்பாவின் முகத்தை துணியால் இறுக்கி கட்டி , தலையை கரும்பு தோட்ட சகதியில் வைத்து அழுத்தி அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலைக்கும், தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் நடித்து வந்த ராமதாசின் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரின் சட்டை மற்றும் வேட்டியில் சகதி இருந்துள்ளது பொலிசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாசின் மொபைல் போனை ஆராய்ந்து பார்த்த போது கொலை செய்வது எப்படி? போன்ற வீடியோக்களை, யூடியூப் மற்றும் முகநூலில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ராமதாஸ் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்