எங்களை மகனும், மருமகளும் நடத்திய விதம்: தற்கொலை செய்த பெற்றோரின் உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மகனும், மருமகளும் தங்களை புறக்கணித்ததால் மனமுடைந்த வயதான பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜானி. இவர் மனைவி ரூபி. தம்பதியின் மகன் பெயர் திபஷிஸ் கார்காரியா.

திபஷிஸுக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்நிலையில் தனது பெற்றோரின் வீடு, நிலம், பணம் எல்லாவற்றையும் வாங்கி கொண்ட திபஷிஸ் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதையடுத்து சிறிய வீட்டில் ராஜானியும், ரூபியும் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.

பெற்றோர் இறந்த தகவல் திபஷீஷுக்கு தெரிவிக்கப்பட்டும அவர் சடலங்களை பார்க்க வராமல் தனது மனைவி குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.

இதையடுத்து ராஜானி மற்றும் ரூபியின் சடலங்களை கைப்பற்றிய பொலிசார் அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், மகனும், மருமகளும் தங்களை எந்தளவு புறக்கணித்து கைவிட்டார்கள் என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் திபஷீஸை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள அவர் மனைவியை தேடி வருகிறார்கள்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers