சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது பட்டியலில் இடம் பிடித்த பிரபல தமிழ் நடிகர்

Report Print Kabilan in இந்தியா

’மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக சர்வதேச விருதான IARA-க்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என்கிற பிரிவுகளில் நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக IARA எனும் சர்வதேச விருதுக்கான பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதுக்கான வாக்குப்பதிவு இணையதளத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்படுவார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்