நடிகை பிரியங்காவின் சடலத்தை பார்த்து கதறி அழுத தாய்: இறப்பதற்கு முன்னர் பேசியது இதுதான் என தகவல்

Report Print Raju Raju in இந்தியா

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து அவரது தாய் கதறி அழுதது காண்போர் மனதை உருக்கியது.

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை பிரியங்கா கடந்த 18-ஆம் திகதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் பிரியங்காவுக்கு கணவர் மற்றும் குடும்பத்தால் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவனையில் பிரியங்காவின் சடலம் வைக்கப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த பிரியங்காவின் தாய் அழுதபடியே செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், கடையை விரிவாக்கம் செய்யபோகிறேன் எனவும், பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு வந்து விடு எனவும் பிரியங்கா இறப்பதற்கு முன்னர் என்னிடம் கூறினார்.

என் மகள் சாகும் மனநிலையில் என்னிடம் பேசவில்லை என கூறியுள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் சக நடிகைகள் வந்த போது அவர்கள் தோள் மீது சாய்ந்தபடியும், பிரியங்கா சடலத்தை பார்த்தும் அவர் தாய் அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers