நடுரோட்டில் பெற்ற மகளை உயிரோடு எரித்து கொன்ற தந்தை: பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

சாதி மாறி திருமணம் செய்ய முயன்ற மகளை பெற்ற தந்தை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் சைன்புர் சர்கார் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் லால் (52). இவர் மகள் லட்சுமி பாய் (19). இவரும் ராஜ்குமார் என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இவர்கள் காதலுக்கு சுந்தர்லால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் தந்தை எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடிக்க முடிவு செய்த லட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார்.

இது குறித்து அறிந்த சுந்தர்பாய் லட்சுமியை பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தன்னிடம் இருந்த மண்ணெண்ணெயை லட்சுமி மீது ஊற்றி சுந்தர்பாய் தீவைத்தார்.

இதையடுத்து வலியால் துடித்த லட்சுமி நடுரோட்டிலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் லட்சுமியின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சுந்தர்பாயையும், இதற்கு உடந்தையாக இருந்த அவர் சகோதரரரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers