அந்த இடத்திலேயே வெட்ட வேண்டும்: கொந்தளித்த பிரபலம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை அயனாவரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள் என வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசியுள்ள எடிட்டர் ஆண்டனி, ஒரே இரவில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

அதேபோன்று இந்த கொடுமைக்கும் சட்டம் கொண்டு வரவேண்டும், உடனடியாக தண்டை அளிக்காவிட்டாலும் ஒரு வாரத்திலாவது தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

பாலியல் குற்றங்களை நினைத்தாலே அவர்களுக்கு பயம் வரவேண்டும்.

நான் பேஸ்புக்கில் குறிப்பிட்டது போன்று அந்த இடத்திலேயே வெட்ட வேண்டும், நல்ல வேளை நான் அங்கு தங்கவில்லை, எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

13 வயதுக்கு கீழ் இருந்தால் தான் மரண தண்டனை என்ற சட்டம் உள்ளது, அது என்ன 13 வயது? 60 வயது என்றாலும் வலி ஒன்று தானே, உணர்ச்சிகள் ஒன்று தானே! கடுமையான சட்டங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers