பிரதமர் நரேந்திர மோடியை அவையில் திடீரென கட்டிப்பிடித்த ராகுல் காந்தி

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் லோக் சபா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது இருக்கைகே சென்று கட்டியணைத்தார்.

லோக் சபா கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.

முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விமர்சனம் செய்து பேசினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருந்தார். அதன் பின்னர், ராகுல் காந்திக்கு பேச கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தனது உரையை முடித்த ராகுல் காந்தி, நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டிபிடித்தார். இதனை மோடி சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனினும், பதிலுக்கு அவர் ராகுல் காந்திக்கு கைகொடுத்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்