பேசினாலே கைதா? ஜாமீனில் விடுதலையான சீமான் காட்டம்

Report Print Raju Raju in இந்தியா

சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட சீமான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைக்கு பின்னர் சேலம் மத்திய சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், என்னைக் கைது செய்வதன்மூலம் மக்களை அச்சுறுத்துகிறார்கள்.

அரசாங்கம் கருத்துக் கேட்பதுபோலத் தான் நாங்களும் கருத்துக் கேட்கிறோம்.

எட்டு வழிச் சாலைபற்றிப் பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா?

இந்தத் திட்டத்துக்காக 90 சதவிகித மக்கள் விரும்பித்தான் நிலத்தைக் கொடுத்தார்கள் என முதல்வர் சொல்கிறார்.

அப்படியென்றால், அந்த மக்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது என ஆதங்கத்துடன் கேள்வியெப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்