மனைவியின் பிறப்புறுப்பில் மின்சார ஷாக் கொடுத்து கொன்ற கணவன்: திடுக்கிடும் காரணம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய கணவன் அவரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்திஸ்கர் மாநிலத்தின் ராய்பூரை சேர்ந்தவர் சுரேஷ் மிரி (31). இவர் மனைவி லட்சுமி (27).

சில மாதங்களாக லட்சுமிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய சுரேஷ் அவருடன் சண்டை போட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் இருவருக்கும் இடையில் மீண்டும் சண்டை ஏற்பட்டது.

பின்னர் பாத்ரூமுக்கு சென்று லட்சுமி துணிகளை துவைத்த போது பின்னாலேயே சென்ற சுரேஷ் அவரை அடித்து உதைக்க லட்சுமி மயங்கியுள்ளார்.

பின்னர் மின்சார ஒயரை மனைவியின் அந்தரங்க உறுப்புகளில் பொருத்தி ஷாக் கொடுக்க லட்சுமி துடிதுடித்து இறந்துள்ளார்.

பின்னர் லட்சுமி குடும்பத்தாருக்கு போன் செய்த சுரேஷ், அவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் சுரேஷ் வீட்டுக்கு வந்த போது லட்சுமி பாத்ரூமில் சடலமாக இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சுரேஷிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அனைத்தையும் அவர் ஒப்பு கொண்டார்.

இதையடுத்து சுரேஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்