எஜமானை எரித்து கொலை செய்தது ஏன்? வேலைக்கார பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் செல்போன் வியாபாரி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலைபார்த்த வேலைக்கார பெண் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுல்தான் என்பவர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனையுடன், ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்துவந்தார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி கை, கால்களை கட்டிப்போட்ட நிலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணையி சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுல்தானுடன் கடைசியாக வேலைக்கார பெண் ரெனியாபானு பேசியுள்ளார்.

இதுகுறித்து ரெனியாவிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு முகமது சுல்தான் பாலியல் தொல்லை கொடுத்ததால் இதுபற்றி எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இமாமுதீனிடம் கூறினேன்.

இமாமுதீன் , முகமது சுல்தானிடம் இதுதொடர்பாக பேசினார். அப்போது எங்களை முகமது சுல்தான் மிரட்டினார். எங்களை அவர் வாழவிடமாட்டார் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.

இதையடுத்து 18 ஆம் திகதி மாலை வீட்டிற்கு சென்று முகமது சுல்தானின் கை, கால்களை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்துதோம் என கூறியுள்ளார்.

தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...