அக்கா வயது பெண்ணுடன் தொடர்பு.. கொன்றது ஏன்? கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் உள்ள சாலையோர முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கிடந்தது.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் கொல்லப்பட்ட பெண் ஆவுடையாள்புரம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரது மனைவி பொன்ராணி (34) என்பது தெரியவந்தது.

மேலும் பழனிகுமார் என்பவரது மகன் கோகுல் (28) பொன்ராணியை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் கோகுலை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் பொன்ராணியின் கடை அருகேயுள்ள தனியார் மணல் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்தேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வெளிநாடு செல்ல பொன்ராணியிடம் பணம் கேட்டு வந்தேன். ஆனால் பொன்ராணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் பொன்ராணி மதுரைக்கு வந்தார். பணம் கொண்டு வராததால் ஆத்திரம் அடைந்து பொன்ராணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். பின்னர் சாலை ஓரத்தில் உள்ள காட்டிற்கு அழைத்து சென்றேன். அங்கு சென்றதும் இரும்பு கம்பியால் தலையில் சரமாரியாக தாக்கியதோடு சேலையை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து கோகுலிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers