பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தை பெற்றெடுத்த தம்பதி: கிண்டலுக்கு பயந்து எடுத்த அதிர்ச்சி முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் பேரக்குழந்தைகள் தங்களை கிண்டல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தங்களுக்கு பிறந்த குழந்தையை பெற்றோர் கொலை செய்துள்ளனர்.

கூச்பெஹார் மாவட்டத்தை சேர்ந்த ராம்(47) என்ற கூலித்தொழிலாளிக்கு திருமணமாகி 3 மகள்கள், 2 மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ராமின் மனைவி கர்ப்பமானதையடுத்து இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் தங்களை கிண்டல் செய்வார்கள் என்ற அச்சத்தில் இருந்த தம்பதி, பிறந்த பெண் குழந்தையை கொன்று உறவினர் வீட்டின் அருகே உள்ள குளத்தில் தூக்கி போட்டுள்ளனர்.

அந்த ஊர் பொதுமக்கள் குளத்தில் மிதந்த குழந்தையின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசில் தெரிவித்ததையடுத்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜல்பைகுரியில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

இவர்களுக்கு 3 நாட்கள் பொலிஸ் காவல் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்