எனது தாயின் காதலனால் நான் அனுபவிக்கும் கொடுமைகள்: சிறுமியின் கண்ணீர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுரை மாவட்டத்தில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர் தனது தாயின் கள்ளக்காதலனால் தான் சித்ரவதை அனுபவிப்பதாக பொலிசில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பொலிசில் அளித்துள்ள புகாரில், எனது தாயார் ஜீவா குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார்

எங்களது வீட்டுக்கு மாசானம் என்பவர் அடிக்கடி வந்து போவார். அவர் வரும்போதெல்லாம் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார். இதனை பலமுறை என் அம்மாவிடம் சொன்னாலும், அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

கடந்த வாரம் மாசானம் என்னை பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கில் தொந்தரவு செய்தார். இதற்கு உடந்தையாக எனது தாயும் இருந்தார். நம்ம மாமா தான் என என்னிடம் அம்மா என கூறினார்.

இதிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், ஜீவா, அவரது கள்ளக்காதலன் மாசானம் ஆகியோர் மீது மகளிர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்