சிறுமியை சீரழிக்க முதியவருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி? திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்ய முதியவர் பயன்படுத்திய மயக்க ஊசி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான ரவிக்குமார் (66) பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் மயக்க ஊசி, மயக்க மருந்துகளை சிறுமிக்கு கொடுத்தது தெரியவந்தது.

ரவிக்குமாருக்கு மயக்க ஊசி எப்படி கிடைத்தது என பொலிசார் விசாரித்து வருவதில், ரவிக்குமார் அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்த தகவல் கிடைத்துள்ளது.

இதனால் தான் மயக்க ஊசி, மயக்க மருந்து குறித்த விவரங்கள் அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்று பொலிசார் கருதுகிறார்கள்.

அந்தத் தகவல் உறுதிப்படுத்தினால் மயக்க மருந்து, ஊசிகளை சப்ளை செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்