'அலைபாயுதே' பட பாணியில் ஆரம்பித்த காதல் தற்கொலையில் முடிந்ததால் தீக்காடாக மாறிய கிராமம்!

Report Print Vijay Amburore in இந்தியா

தஞ்சாவூரில் காதல் கணவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட காதலி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு இறந்ததால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார் காதலனின் வீட்டிற்கு தி வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சாமிமலை அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் விவசாயி நீலமேகம். இவரது மகள் அனுசுயா (24) பி.டெக் முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இவருக்கு இவரது எதிர்வீட்டில் இருக்கும் செல்வராஜ் என்பவற்றின் மகன் புகழேந்திக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

24 வயதான புகழேந்தி 10-ம் வகுப்பு முடித்ததோடு, படிப்பை தொடராமல் கேபிள் டிவியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த இருவரும் சமீபத்தில் வீட்டில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு, அலைபாயுதே பட பாணியில் அவரவர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட அனுசுயா, தனது ஆசையை புகழேந்தியிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல்நிலையத்திற்கு சென்ற புகழேந்தி நடந்தவற்றை பற்றி கூறியுள்ளார். பின்னர் நீலமேகத்தை காவல்நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் நடந்தவை பற்றி கூறும்பொழுது, தனது மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதை பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த நீல மேகம், புகழேந்தியின் வீட்டிற்கு சென்று எனது மகளை ஏமாற்றிவிட்டாய் என கூறி சண்டையிட்டுள்ளார்.

இரு குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் புகழேந்தி குடும்பத்தாரை சேர்ந்த 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற நீல மேகம் மானத்தை வாங்கிவிட்டியே என கூறி, அனுசுயாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அனுசுயா விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. புகழேந்தியால் தான் அனுசுயா இறந்து விட்டாள் என நினைத்த அனுசுயா உறவினர்கள் உடனடியாக புகழேந்தியின் வீட்டிற்கு தீ வைத்ததோடு, புகழேந்தியின் சகோதரிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர்.

கிராமமே கலவரமாக காட்சியளிக்க காவல்துறையின் கவனத்திற்கு சம்பவம் குறித்த தகவல் சென்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் ரேகா ராணி, வழக்கு பதிவு செய்ததோடு அங்கு சில காவலர்களுடன் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்