பூட்டிய வீட்டில் கருகிய நிலையில் ஆண் சடலம்: கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னை ஆலந்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பூட்டிய வீட்டில் கை, கால்கள் கட்டிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆலந்தூர் எம்.கே.என் சாலை 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் முகமது சுல்தான் (40). இவர் ரிச்சி தெருவில் எலெக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

நேற்றைய தினம் திடீரென இவரது வீட்டில் இருந்து புகை வெளியாவதை கண்ட பொதுமக்கள் அதிச்சியடைந்து வீட்டை திறக்க முற்பட்டுள்ளனர். ஆனால் வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்ததால், உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற பொழுது, இரும்புக்கம்பியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கரிக்கட்டையாக முகமது எறிந்திருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், முகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்