15 ஆண்டுகளுக்கு பின் இந்திய அரசியலில் பரபரப்பு... என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளைய தினம் நடைபெற உள்ள நிலையில், இந்திய அரசியல் தளத்தில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது.

கடந்த 2003-ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பினை நடத்தினர். இதில் தோல்வியுறுவோம் என தெரிந்ததுமே காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வாக்கெடுப்பில், 312 வாக்குகளை பெற்று பாஜகவே வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான திட்டம் இடம்பெறாததால், பாஜகவின் கூட்டணியிலிருந்து சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பிரிந்தது. மேலும் பாஜகவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டுவர முனைந்தது. இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சியினரை சந்திக்கையில், கோரிக்கையின் பலனாக சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் அதனை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள மழைக்கால கூட்டத்தொடரில், கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, பாஜகவின் தர்மேந்திர பிரதான், ``இந்திய மக்கள் நம்பிக்கையுடன் பிரதமர் மோடியைத் தேர்வு செய்துள்ளனர். அதனால் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்" எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதன்படி நாளைய தினம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கான விவாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த அரசியல் மிகுந்த பரபரப்பில் காணப்படுகிறது.

பாஜகவிற்கு மக்களவையில் போதிய அளவிற்கு உறுப்பினர்கள் இருந்தாலும், மாநிலங்களவையை பொறுத்தவரை போதிய உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பது சற்று பின்னடைவை தரலாம் என்ற அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மாநிலங்களவையை பொறுத்தவரை இத்தனை நாட்களாக பாஜகவிற்கு கீழ் அதிமுக செயல்பட்டு கொண்டிருந்தாலும், நாளை ஒரு நாள் மட்டும் அதிமுகவிற்கு கீழ் தான் பாஜக செயல்பட முடியும் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர பிரச்னைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்