வேறு நபரை மணக்க முடிவெடுத்தால் ஆத்திரம்: நடுரோட்டில் கழுத்தறுத்து ஆசிரியை படுகொலை... உறவினர் வெறிச்செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவித்ரா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற பவித்ரா ரோட்டில் ஒரு இளைஞரை சந்தித்தார்.

இருவரும் முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் ஏறி சென்ற நிலையில் உடனிருந்த வாலிபர் பவித்ராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

பழனி பூங்கா ரோட்டில் ஆட்டோ சென்றபோது, பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்த வாலிபர் பின்னர் ஆட்டோவிலிருந்து குதித்து ஓடிவிட்டார்.

இதை பார்த்து அதிர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்துராமலிங்கம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.

அங்கு பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

பவித்ராவின் கழுத்தை அறுத்தவர் அவரது உறவினர் மாயவன் என தெரியவந்துள்ளது. கழுத்தை அறுத்துவிட்டு தப்பிசென்ற மாயவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

மாயவனும் பவித்ராவும் காதலித்து வந்திருக்கலாம் எனவும், பவித்ராவுக்கு வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாயவன் அவரை கொன்றிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்