பிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன்: முதியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளது

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்கள் பொலிசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர்.

இவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக சேர்ந்துள்ளார்.

அங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார், அந்த மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்