கணவனை கொன்று வீட்டிலேயே புதைத்து சடலத்துடன் தங்கிய மனைவி: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவனை கொலை செய்து வீட்டில் புதைத்து விட்டு அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஹசிதி கிராமத்தை சேர்ந்தவர் பாசு. இவர் மனைவி ஜமுனா தேவி.

ஜமுனாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் தகாத உறவு இருந்த நிலையில் பாசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் பாசுவை கொல்ல முடிவெடுத்த ஜமுனா உணவில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொன்றுள்ளார்.

பின்னர் வீட்டு படுக்கையறையில் பாசுவை புதைத்த ஜமுனா அங்கேயே ஒரு வாரம் எந்த பயமும் இன்றி தங்கியுள்ளார்.

ஆனால் இதன்பின்னர் சடலத்திலிருந்து நாற்றம் வர தொடங்கியதால் பயந்து போன ஜமுனா நேராக ஊர்பஞ்சாயத்து தலைவரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார்.

பாசுவின் உடலை இருவரும் சேர்ந்து எரித்து விடலாம் எனவும், அதற்கு தான் பணம் தருவதாகவும் தலைவரிடம் ஜமுனா கூறியுள்ளார்.

இதற்கு ஒப்பு கொள்ளாத தலைவர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பாசுவின் சடலத்தை கைப்பற்றியதோடு ஜமுனாவையும் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து நடந்த அனைத்தையும் பொலிசாரிடம் ஜமுனா வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்